Showing posts with label IPL. Show all posts
Showing posts with label IPL. Show all posts

Sunday, April 18, 2010

564. IPL Semifinal Scenario -Part 2

தமிழ் வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பொறுத்தருளவும் :-) IPL கிரிக்கெட் பற்றி எழுதும்போது, தமிழில் எழுதினாலும், ஆங்கிலம் நிறைய கலப்பதால், பெரிய வித்தியாசம் ஏதுமில்லை!

3 matches to go: CSK vs KXIP, DC vs DD, KKR vs MI

8 possible scenarios are possible and after analyzing those, the summary is as follows:

1. I will talk about CSK first! Chennai needs a "simple" win (last ball of 20th over OR by 1 ball) against KXIP to qualify for Semis irrespective of what happens in other 2 matches as CSK has a NRR that is better than all its possible competitors, RCB, DD, DC & KKR.

CSK will decide its own destiny today at Dharmasala!

2. Mumbai win will ensure 100% Semifinal berth for RCB irrespective of other 2 matches.

CSK Losing against KXIP ensures a 3rd place Semifinal spot for RCB, irrespective of other 2 matches. So, RCB & Mallya fans should support Punjab team :-)

Considering all scenarios, it is 99% likely that RCB will enter semifinals in 3rd or 4th place. So, all RCB fans can actually relax for few days, before it gets beaten in the semis anyway ;-)

3. CSK & DC losing their respective matches and KKR winning against MI (ensuring its NRR overtakes that of DC!) is the only realistic scenario where KKR goes to semis along with MI, DD & RCB.

There are other unrealistic scenarios too where KKR can go thru' (theoretically speaking!) where "Himalayan" margin of win is needed by KKR, moving from a -ve NRR (-0.46) to +ve NRR ahead of teams like RCB & DD. I am not going to waste my time discussing those (as though I am not doing now watching IPL!) ;-)

4. One of the 2 teams, DD or DC, gets thru' to Semifinals w/o any worry about NRR & results of other 2 matches, as it reaches 16 points.

MI winning & CSK losing their respective matches is good not only for RCB, but for DC and DD as well (irrespective of the DD-DC result!) to qualify for semis. So, number of enemies for CSK has increased dramatically now ;-)

5. If DC & CSK win today, it will be ensured that 3 teams from the south (Chennai, Hyderabad, Bangalore) enter semifinals and at least 1 would reach the IPL finals!

An MI win & CSK loss ensures 2 South teams (RCB and DC) reach SF and here again, 1 of them would reach Finals!

But my support would be for Mumbai if CSK does not reach Finals! (I am sure that CSK will enter Semis anyway :-)) I would like to see Mumbai win the finals, just to see the smile on the face of that great man who has led his team so admirably, though I am not a great fan of Nita Ambani ;-)

Making the "God" feel sad is not good for the country that has embraced cricket as its religion!

அன்புடன்
பாலா

Saturday, April 17, 2010

563. IPL செமிஃபைனல் தகுதி நிலைமை

இன்று நடக்கவிருக்கும் மும்பை-பெங்களூர் மற்றும் KKR-RR ஆட்டங்கள் செமிஃபைனல் தகுதிக்கான போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல.

1. பெங்களூர் வென்றால், NRR குறித்த அக்கறையின்றி, தகுதி பெறலாம். அவ்வளவே! மும்பையிடம் தோற்றாலும் கூட, மகா கேவலமாய் தோற்றாலொழிய, பெங்களூர் செமிக்கு தகுதி பெறுவது 99% உறுதி. எத்தனையாவது இடத்தில் தகுதி பெறும் என்பதை மட்டுமே, இந்த RCB-MI ஆட்டம் நிர்ணயிக்கும். அதாவது, மும்பை, பெங்களூர் செமிஃபைனலுக்குத் தகுதி பெற்று விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம்!

2. ராஜஸ்தானின் NRR மோசமாக இருப்பதால், KKR-ஐ அதிக ரன் வித்தியாசத்திலோ, மிகக் குறைந்த ஓவர்களிலோ வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் உள்ளது. இது சாத்தியம் இல்லை என்பது என் அனுமானம். ஆனால், சென்னை பஞ்சாபுடன் தோற்று, தில்லி DC-ஐ வீழ்த்தினால், (மும்பை, RCB, தில்லியோடு) 4வது இடத்தில், செமிக்கு தகுதி பெறலாம். அதனால், ஒரு 20% வாய்ப்பு இருப்பதாகக் கொள்ளலாம்!

3. (NRR படுமோசமான நிலையில் இருக்கும்!) கொல்கத்தாவோ இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை (பெரிய அளவு வித்தியாசத்தில்!) வென்றாலும், மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் (பெரிய அளவு வித்தியாசத்தில்!) வெல்ல வேண்டும்! ஆக, KKR-க்கு 5% வாய்ப்பு கூட கிடையாது. மேலும், பெரிய அளவு வித்தியாசத்தில் வெல்வது என்பது T-20 ஆட்டத்தில் அவ்வளவு எளிதானதல்ல. எப்போதாவது (சென்னை KKRஐ சேப்பாக்கத்தில் வீழ்த்தியது போல!) நிகழ்வது அது!

4. சென்னை செமிக்கு தகுதி பெற நாளை பஞ்சாபை வென்றாக வேண்டும்! NRR ஆரோக்கியமாகவே இருப்பதால், பெரிய அளவில் வெல்ல வேண்டும் என்று நினைத்து ஆடி நாம் தோற்காமல் இருந்தால் சரி தான் :-) I believe, a simple win should take CSK to semifinals, no need to worry about other matches considering the NRRs of different teams. KXIP-க்கும் கடைசி ஆட்டம் இது என்பதால், இது வரை சொதப்பி வந்த யுவராஜ், நம்மைப் பின்னி பெடலெடுத்து விடுவாரோ என்று ஒரு பயம் வருகிறது! Yuvaraj & KXIP would do their best to go down / leave this year's tournament with Glory!

5. 14 புள்ளிகளில் இருக்கும் தில்லி, ஹைதரபாத் மற்றும் பெங்களூர் அணிகள், (12 புள்ளிகளில் இருக்கும், NRR ஆரோக்கியமாக இருக்கும்!) சென்னை அணி தோற்பதையே அதிகம் விரும்புவார்கள்! ஆக, சென்னைக்கு எதிரிகள் அதிகமாகி விட்டார்கள்! பஞ்சாப் மட்டுமே நம் எதிரி அல்ல ;-)

6. DD-DC ஆட்டம் ஒரு முக்கியமான ஆட்டம். வெல்லும் அணிக்கு, கண்ணை மூடிக் கொண்டு செமிஃபைனல் தகுதி கிட்டி விடும். சென்னையும், ராஜஸ்தானும் தங்கள் கடைசி ஆட்டங்களில் தோற்கும் சூழலில், தில்லி, ஹைதராபாத், இரு அணிகளுமே செமிக்கு தகுதி பெறவும் வாய்ப்பு இருக்கிறது!

7. கடைசி ஆட்டமான MI vs KKR, அணிகளின் தற்போதைய NRR-ஐ வைத்துப் பார்க்கும்போது, செமிஃபைனல் தகுதி நிலைமையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று இப்போதே கூறுவேன்! ஆக, மும்பை, RCB தவிர, மற்ற இரண்டு செமிஃபைனல் இடங்களுக்குத் தகுதி பெற தில்லி, DC, CSK என்று 3 அணிகளுக்கு மட்டுமே பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானுக்கு, மேலே சொன்னபடி, 20% வாய்ப்பு...

எ.அ.பாலா

Tuesday, April 06, 2010

561. வீறு கொண்டு எழுந்து த்ரிவிக்ரமனாக விண்ணளந்த முரளி விஜய் -IPL

1. CSK vs RCB at Chennai

தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்த சென்னை, பலமான RCB அணியுடன் சேப்பாக்கத்தில் மோதியபோது, எனக்கு நம்பிக்கை இல்லை. அதுவும், 10 ஓவர்களில் 80-2 என்று RCB இருந்த நிலையில், 180 உறுதி என்று தான் தோன்றியது. துஷாரா, ஜகதி, முரளி என்று மூவரும் திறமையாக பந்து வீசியதில், RCB எடுத்தது 161 ரன்கள் மட்டுமே!

161-ஐத் சென்னை அணி துரத்தியபோது, விஜய்யின் வீறுகொண்ட ஆட்டத்தால் (ஒரு ஓவரில் பிரவீனை 26 ரன்களுக்கு விளாசினார்!), மேட்ச் நமக்கு டென்ஷன் இல்லாமல் தான் போய்க் கொண்டிருந்தது. விஜய் அவுட்டானபோது ஸ்கோர் 104-2 (10.5). அதில், அவர் எடுத்தது 78 ரன்கள் (39 பந்துகள், அதாவது 200% SR). தேவையான ரன்ரேட், 6.4 மட்டுமே! தோனியும், மார்க்கலும் பயங்கரமாகத் தடவி அவுட்டும் ஆனதில், ஸ்கோர் 143-4 (17.3), ரன்ரேட் 7.6, ரெய்னா இருந்தபோதும், ரென்ஷன்! (என் மனதில் பஞ்சாபுக்கு எதிரான, நாம் சூப்பர் ஓவரில் தோற்ற மேட்ச் நிழலாடியது) :-)

பத்ரி & ரெய்னா, 2 ஓவர்கள், 16 ரன்கள் தேவை. 4 பந்துகளில் 6 ரன் எடுத்து, 5வது பந்தில், பத்ரி அனாவசிய அவுட்! இப்போது, 7 பந்துகள், 10 ரன் தேவை! "பஞ்சாபிய" துர்சொப்பனம் பயமுறுத்தியவண்ணம் இருந்தது! வினய்குமார் என்ற மிக நல்லவர் நோ பால் வீச, ரெய்னா ஸ்டம்பை விட்டு நகர்ந்து, கவர் மேல் பந்தை தூக்கியடித்தார், Shot of the day, சிக்ஸர்! சென்னை ரசிகர்களின் பிரஷர் சர்ரென்று குறைந்தது :)

7 பந்துகளில், 3 ரன்கள் தேவை. மீண்டும் நோ பால், 2+1 ரன்கள், சென்னைக்கு மிகத் தேவையாய் இருந்த ஒரு வெற்றி கிட்டியது, அதுவும் ஒரு பலமான அணியுடன்! ஏதோ ரன் கணக்கு குளறுபடியில், இன்னொடு பந்து வீசப்பட்டு, ரெய்னா இன்னொரு பவுண்டரி அடித்து வெற்றியை இன்னொரு முறை கன்பர்ம் செய்தார், சுபம் :-)

2. CSK vs RR at Chennai
சென்ற மேட்சில் வீறுகொண்டு எழுந்த விஜய், இந்த மேட்சில், த்ரிவிக்ரமவதார வாமனன் விஸ்வரூபமெடுத்து விண்ணளந்தது போல, ஒரு ஆட்டம் ஆடியது கண் கொள்ளாமல் இருந்தது என்றால் அது மிகையில்லை!

இது போன்ற அதிரடியை இதுவரை சேப்பாக்கம் பார்த்ததில்லை என்று நிச்சயமாகக் கூறலாம்! விஜய் ஆடிய காஸ்மிக் நடனத்தால் (127 ரன்கள், 56-ஏ பந்துகளில், SR 227%)சென்னை, IPL-ன் அதிகபட்ச மொத்த ரன் எண்ணிக்கையை (246) எட்டியது. நூறு அடித்த ஒரு பேட்ஸ்மன் பவுண்டரிகளை விட சிக்ஸர்கள் நிறைய அடிப்பது எப்போதும் நிகழ்வதில்லை. விஜய் அடித்தது, 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் (98 ரன்கள்!!!)

ராஜஸ்தானை எளிதாக வென்று விடலாம் என்று தான் மொத்த சென்னையும் எண்ணியது. ஆனால், RR-ன் பதிலடி spectacular என்ற வகையில் அமைந்தது. பாலிங்கரைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் (முரளியும் சேர்த்து!) எல்லாரும் நையப்புடைக்கப்பட்டார்கள்!
15வது ஓவர் முடிவில், RR 175-2. வாட்சனும் (60, 24 பந்துகள்), ஓஜாவும் (65, 38 பந்துகள்) பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருந்தனர். அதனால், பிரதி ஓவர் 14.4 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்காகவே தோன்றியது!
தனது முதல் 2 ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்த பாலிங்கர் பந்து வீச வந்தார்! ஒரு நோ பாலுடன் ஆரம்பித்தாலும், அடுத்த பந்தில், வாட்சனை clean bowled செய்தார். இது தான் மேட்சின் திருப்புமுனை, அதோடு அந்த ஓவரில் 8 ரன்களே கொடுத்தார். அடுத்த ஓவரை சிறப்பாக வீசிய ரெய்னா கொடுத்தது 9 ரன்கள். 3 ஓவர்களில் 55 ரன்கள் தேவை, போலிங்கருக்கு இன்னும் ஒரு ஓவர் இருந்த சூழலில், Match was almost sealed in favour of CSK! ரிசல்ட்: CSK 23 ரன்களில் வெற்றி

ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இரு அணியினரின் பந்து வீச்சாளர்களும் துவைத்துத் தொங்கவிடப்பட்ட ஒரு சூழலில், பாலிங்கர் தனது 4 ஓவர்களில் கொடுத்தது, 15-ஏ ரன்கள் (2 விக்கெட்டுகள்) !!!!! பிரதி ஓவருக்கு 4 ரன்கள் கூட இல்லை.
அது மட்டுமலலாமல், ஒரு பிரமாதமான கேட்ச் பிடித்து "கிங்கரன்" பதானை வெளியேற்றி, சென்னைக்கு பெரிய அளவில் டேமேஜ் எதுவும் ஏற்படாமல் காப்பாற்றிய பெருமையும் போலிங்கருக்கே! விஜய்யின் 127க்கு சற்றும் குறைவில்லாதது, போலிங்கரின் பங்களிப்பு. மற்ற சென்னை பந்துவீச்சாளர்கள் பிரதி ஓவருக்கு வாரி வழங்கியது கீழே:

Bowling O M R W Econ
JA Morkel 4 0 56 2 14.00
S Tyagi 4 0 45 0 11.25
M Muralitharan 4 0 52 1 13.00
SB Jakati 3 0 37 0 12.33
SK Raina 1 0 8 0 8.00

ஒரே ஒரு வருத்தம் தான்! பாலாஜி அணியில் இருந்திருந்தால், அவரும் ஒரு அரை சதமாவது அடித்திருப்பார் ;-)

எ.அ.பாலா

Monday, March 29, 2010

558.சென்னை அணியின் 4வது தொடர் தோல்வி -CSK vs RR

சென்னை தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததால், ராஜஸ்தானுடன் ஆன போட்டியில் சூடு பறக்கும் என்று எண்ணினேன்! ஆனால், தோல்விக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் இல்லை என்று சென்னை அணி கேவலமாக விளையாடி தோற்றது!
முதலில் ராஜஸ்தான் அணி பேட் செய்தது, முதலில் நிதானமாக ஆடிய ஓஜா, பிறகு எல்லா போலர்களையும் ஒரு வாங்கு வாங்கியதில், 11 ஓவர்களில் ஸ்கோர் 100-1. யூசுப் பதான் இன்னும் களமிறங்காத நிலையில், ராஜஸ்தான் 200 தொடுவார்கள் என்று தான் எண்ணினேன். சிறப்பாக பந்து வீசிய ஜகதியின் பந்தில், பதான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஓஜா, 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தது ஹைலைட், அது போல, நன்றாக பந்து வீசக்கூடிய மார்க்கல், 4 ஓவர்களில் 46 ரன்கள் வாரி வழங்கியது ஒரு கரும்புள்ளி. இருந்தாலும், 177 ரன்கள் என்பது தோனி, ரெய்னா, ஹெய்டன் உள்ள சென்னைக்கு கடின இலக்காகத் தோன்றவில்லை!

ஹெய்டன் சீக்கிரமே அவுட் ஆனாலும், விஜய் நன்றாகவே ஆடினார். நர்வாலின் ஒரு ஓவரில் விஜய் 26 ரன்கள் குவித்தது ஹைலைட். 75-2 (8.4) என்ற நிலையில், இல்லாத ரன்னுக்கு ஸ்டார்ட் கொடுத்து, கிரிஸூக்குத் திரும்ப முடியாமல், விஜய் அனாவசிய ரன்-அவுட்! விஜய்யைப் போலவே, மூளையை அடகு வைத்து, ரெய்னா வார்ன் பந்தில் Clean Bowled! 79-3 (9.4). தோனி இருந்ததால் நம்பிக்கை இருந்தது, ரன்ரேட் 9.7 ஆக இருந்தாலும்!

ஒரு கட்டத்தில், ரன்ரேட் 12க்கு மேலே சென்றது, இருந்தும் நம்பிக்கை இருந்தது தோனி மேல்! தமிழ்நாட்டுச்சிங்கம், domestic ஆட்டப்புலி பத்ரி, ரன் எடுக்கையில் தோனி மீது மோதி, அவர் மட்டையையும் தட்டி விட்டதில், தோனி ரன்அவுட். சென்னைக்கு ஆப்பு உறுதியானது!
மார்க்கல், வார்ன் ஓவரில் (18வது) 3 சிக்ஸர்கள் அடித்து ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனாலும், அடுத்த ஓவர் வீசப்போவது வேகப்பந்து வீச்சாளர் டைட் என்பதால், வெல்வது கடினம் என்று புரிந்தது! டைட் மார்க்கலை அவுட்டாக்கினார், 160-ல் சென்னை சுருண்டது! டைட் பந்து வீச்சு அபாரம்: 4-0-22-2. திரிவேதியும் தனது 4 ஓவர்களில் 16 ரன்களே கொடுத்தார்!

தோனி பத்ரிக்கு முன்னால், மார்க்கலை பேட் செய்ய அனுப்பியிருக்க வேண்டும். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் விழும்போது தான், இன்னிங்சை சீர்படுத்த பத்ரியை அனுப்புவது பயன் தரும்! அடுத்த ஆட்டத்தில் மார்க்கலை சற்று முன்னால் ஆட அனுப்பினால் நல்லது என்று தோன்றுகிறது!

"லோக்கல்" வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது தான், சென்னை அணியின் தோல்விகளுக்கு முக்கியக் காரணம். இத்தோல்விக்கு (நன்றாக ஆடிக் கொண்டிருந்தபோது!) தன்னைத்தானே ரன்அவுட் செய்து கொண்ட விஜய்யும், தோனியை ரன்அவுட் செய்த பத்ரியும் அதிமுக்கியக் காரணங்கள்! Batsmen who get good starts should carry on to win the game! இப்படி நான் சொன்னது, டிவிட்டரில் உலவும் தமிழ்ப்பாசம் மிக்க, "வருத்தப்படாத" வாலிபர் ஒருவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தினால் நான் என்ன செய்ய ;-)

அடுத்து நடந்த MI vs DC ஆட்டத்தில், 16 பந்துகளில் 49 ரன்கள் விளாசிய ஹர்பஜனிடமிருந்து சென்னை அணியின் லோக்கல் மட்டையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது! திறமை மட்டுமே போதாது, மனஉறுதியும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு மிக அவசியமான குணங்கள்.

ஒரு பந்துவீச்சாளரோ/ மட்டையாளரோ ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணியின் வெற்றிக்கு தனிக்காரணமாக விளங்க T-20-இல் (டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களைக் காட்டிலும்) சாத்தியங்கள் அதிகம்! எல்லாரும் சிறப்பாக ஆடும்போது, தானும் கலக்குவது பெரிய விஷயமில்லை என்பதை சென்னை "லோக்கல்" வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Even if one fails in couple of matches, when he rises to the occasion when the chips are down and ensures victory in the 3rd match, his failures can be ignored! But, unfortunately that is not the case with the CSK's Local players :-(

எ.அ.பாலா

Saturday, March 27, 2010

557.மற்றுமொரு தோல்வி -CSK vs MI -IPL

இந்த மேட்சை பார்க்க ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்து விட்டேன்! தோனி சச்சினுடன் டாஸுக்கு வந்தது வயிற்றில் பாலை வார்த்தது. சச்சின் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். நாம் டாஸில் ஜெயித்திருந்தாலும், பேட் செய்திருப்போம் என்பது என் அனுமானம்.

ஜாகீரை ஒரு ஓவரில், மங்கூஸ் துணையின்றி, 4 பவுண்டரிகள் அடித்த ஹெய்டன் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கவில்லை, ஹர்பஜன் பந்து வீச்சில் அவுட்! பார்த்திவ்வும் (இவரை யாரோ குட்டி ஹெய்டன் என்றதற்கு எதால் சிரிப்பது என்று தெரியவில்லை!) சீக்கிரமே ஆட்டமிழந்தார். தோனி அணிக்குத் திரும்பியதால், confidence personified ஆக ரெய்னா பயமின்றி விளையாடியது, நல்ல பலனைத் தந்தது. முதலில் நிதானமாக ஆடிய பத்ரியும், ரெய்னாவும் ரன்களை குவிக்க ஆரம்பித்தனர், மும்பை தரப்பில் மெக்லாரனும், ஹர்பஜனும் சிறப்பாக பந்து வீசியபோதும்!

இருவரும் 15 ஓவர்கள் ஜோடி சேர்ந்து ஆடியதில், ஸ்கோரை 38லிருந்து 180க்கு எடுத்துச் சென்றனர். அதாவது, 15 ஓவர்களில் 142 ரன்கள் (9.47 பிரதி ஓவருக்கு). இன்னும் ஒரு 10 ரன்கள் எடுத்திருக்கலாம் தான் என்றாலும், 180 என்பது defend செய்யத் தக்கதே என்பது என் கருத்து!

இப்படிச் சொல்லக் காரணங்கள் உள்ளன!

1. முரளியும், மார்க்கலும் நல்ல பந்து வீச்சாளர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம், அஷ்வினுக்கு பதிலாக வந்த ஜகதியும் மோசமான பந்து வீச்சாளர் இல்லை! பாலாஜியும், ஜோகீந்தரும் ஓரளவு ஈடு கொடுத்தால், மும்பையை கலங்கடிக்க முடியும்!

2. மும்பை அணியில் சச்சினைத் தவிர மற்றவர் ஆவரேஜ் பேட்ஸ்மேன்கள் தான். ப்ரேவோ, போலார்ட் இருவரும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தடுமாறுபவர்கள்! தவான், திவாரி, சதீஷ் எல்லாம் நேற்றைய மழையின் காளான்கள் வகை, பிரஷரை எதிர்கொள்ளும் திறன் அற்றவர்கள்!

தோனியின் பந்துக் காப்பமைப்பும் (Field placement) பந்து வீச்சு மாற்றங்களும் நேற்று சோபிக்கவில்லை! இடையில் 3 மேட்ச்கள் ஆடாதது காரணமாக இருக்கலாம். பாலாஜி, ஜோகீந்தர் புண்ணியத்தில், தவான் செட்டில் ஆகி நம்மை ஒரு வாங்கு வாங்கினார். சச்சின் விளாசலை ஏற்றுக் கொள்ளலாம். தவானையெல்லாம் வளர்த்து விடுவது கொடுமையின் உச்சம்! இருந்தும், 92 for no loss (8.5 ஓவர்கள்) நிலையிலிருந்து மும்பை 120-3 (13.2) என்ற நிலைக்கு வந்ததற்கு முரளியும், ஜகதியும் தான் காரணம். சென்னைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது!

கடைசி 5 ஓவர்களில், 48 ரன்கள் (RR 9.6) தேவை என்ற நிலையில், Match was interestingly poised. அப்போது தான் தோனி ஒரு பெரும் தவறிழைத்தார்! தனது முதல் மேட்ச் ஆடும் பெரேராவை 16வது ஓவரை வீச அழைத்தார். ஒரு பந்தைக் கூட பிட்ச் பண்ணத் துப்பில்லாத அந்த அறிவிலி, அந்த ஓவரில் 19 ரன்கள் (4 பவுண்டரிகள்) வாரி வழங்கினார்!!! அதன் பின், போலார்டும், சச்சினும் விக்கெட்டிழந்தும் பயனொன்றுமில்லை. சென்னை அணியின் மூன்றாவது தொடர் தோல்வி இது!

KXIPக்கு எதிரான மேட்ச்சில் 2 பந்துகளில் 1 ரன் அடிக்கத் துப்பில்லாத அஷ்வின் அத்தோல்விக்கு முக்கியக் காரணமானார். மும்பைக்கு எதிரான தோல்விக்கு (மேட்ச் மும்பை பக்கம் திரும்பியதற்கு!) பெரேராவின் பந்து வீச்சே காரணம்! டிவிட்டர் நண்பர் ஒருவர் (http://twitter.com/mu75) கூறியதைச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:
It is written. How Sinhalese can win a match for Chennai? :-(

நமது பந்து வீச்சு, முரளி, மார்க்கல் தவிர்த்து, படு சுமாராய் காட்சியளிப்பதை வைத்துப் பார்க்கையில், சென்னை அணி செமிஃபைனலுக்கு தேர்வாகும் என்று தோன்றவில்லை! நமது பேட்டிங்கை வைத்து, 136 ரன்கள் இலக்கையும் அடைய முடியவில்லை, நமது பந்துவீச்சை வைத்து, 180 ரன்கள் இலக்கையும் டிஃபண்ட் பண்ண முடியவில்லை :( என்ன இழவு பிரச்சினையோ?

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails